Published in எழுத்தாளர் ஜெயமோகன்
பிறர் என்றொருவரில்லை (தோழர் தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்”)https://akazhonline.com/?p=4299நன்றி : அகழ்
நடுச்சாமத்தில்கொஞ்சம் துணிகளோடுவீட்டை விட்டு வெளியேறிய அன்றுமேலே வானம் இருந்ததுஊசிக் கப்பலும்புறாக்களின் குட்டிகரணமும் பார்த்தஅந்த வானம் அன்றுஅது வேறுவேடிக்கைகள் விடைபெற்ற பிறகுமுதன் முதலாகஎப்போது அண்ணாந்து பார்த்தேன்என்பது நினைவில்லைஆனால்அப்போது அழுது கொண்டிருந்தேன்அது நினைவில் இருக்கிறது.சாய்ந்து ...
அறுவை சிகிச்சை முடிந்துஆயுள் முழுதும் உபயோகிக்க வேண்டுமெனபரிந்துரைக்கப்பட்டகண் மருந்தை வாங்கி வருவதற்காகஅவர் கிளம்பிக் கொண்டிருக்கிறார்"துணைக்கு வரவா" ?என்று கேட்ட மனைவியின் குரலைமுறைத்து விட்டு நடக்கிறார்பழமை வாய்ந்த அந்த மருந்துக் கடையில்அரசுப் பணியில் சேரும் முன்நான்கு வருடங்கள்அவர் ...
நான் போகட்டுமென்றுஅவர் நின்று கொண்டிருக்கிறார்அவர் போகட்டுமென்றுநான் நின்று கொண்டிருக்கிறேன்நான்தான் போக வேண்டுமென்றுஅவர் சிரித்துக் கொண்டு நிற்கிறார்.அவரே போகட்டுமென்றுநான் அடம்பிடிக்கிறேன்இந்தப் பத்து நொடித் தாமதத்தைபையில் போட்டுஅலுவலகத்திற்கு எடுத்துப் போனேன்.அம்மா கொடுத்தனுப்பியகுளோப் ...
இதோ இந்த டிரைவர்ஒலிக்கவிடும் பாடல்கள்ஏற்கனவே எண்ணிறந்த முறைகள் கேட்டவை.ஆயினும்அவை திடீரென வருகின்றனதிடீரென வருதலின் ஆனந்தத்தோடுஎன்னிடம் மேம்படுத்தப்பட்ட ஒலிநுட்பக் கருவிகள் உண்டு'அன் லிமிடெட் டேட்டா' வுள் உலகம் கொட்டிக் கிடக்கிறது.தவிரஎன்னிடம் ஒரு சிறிய கார் உண்டுஎன்னால் காற்றைப் பறிக்க ...
நண்பனின் புதிய அறைக்குப் போயிருந்தேன்பால்கனியில் நின்று பார்த்தால் தூரத்தில் நீலக்கடல்புகைப்பழக்கம் இல்லைஆயினும்படிகளில் இறங்கி ஓடினேன்இப்போதுநான் என்னை ஏந்திக் கொண்டு நிற்கிறேன்விரலிடையில்மெல்ல மெல்ல ஆவியாகிறேன்சிகரெட் சாலையைக் கடந்துகட்டிடங்களைக் கடந்துகரையைக் கடந்துகடலைப் போய்த் ...
கடவுள் மனிதனுக்கு முதலில் கண்களைப் படைத்தான் பிறக்கப் பிறக்கவேஅகலத் திறந்து கொண்டன கண்கள்.மனிதன் மகிழ்ச்சியில் கூவினான்.நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான்."கடவுளே!நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியேஎம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!"கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டுபிறகு ...
ஏனோ அத்தருணத்தை அவருக்குவெகுவாகப் பிடித்து விட்டது.அப்போது எதிர்ப்பட்டால் எவரையும் பிடிக்குமென்பதால்என்னையும் பிடித்துவிட்டது."வாறீயாணே...?" என்று கேட்டார்.மிக உறுதியாக அது ஒரு கட்டணமில்லா அழைப்பு.கூடுதலாகஅது குதிரை மேலுமன்று.
ஆருயிர் நண்பனொருவன்விபத்தில் சிக்கிஉடல் முழுக்க குழல்கள் செருகப்பட்டுஅவசர சிசிக்சைப் பிரிவில் கிடந்தான்ஒரு மாத காலம்.வார்டுக்கு மாறிஒரு மாதம் கிடந்தான்வீட்டிற்கு மாறிஒரு மாதம் கிடந்தான்காவிய ருசியின் கிறுகிறுப்போடுஎன் கவிதை ஏட்டை மெல்லப் புரட்டினான் இன்று.அவனுக்குத் தெரியும்நான் சொற்களால் கண்ணீர் ...
காதல்நிரம்பி வழிவதிலிருந்துதுவங்குகிறதுநீயோகவனம், கவனம் என்றுபதறுகிறாய்காதலின் பசியது காயசண்டிகைநீயோ போதும், போதும் என்றுமறுதலிக்கிறாய்ஒளிந்து கொள்ளும் அளவு சிறுத்ததுஉறுதியினும் உறுதியாககாதல் அல்லடி கண்ணேலூசுப் பெண்ணே!இன்ஞ் டேப்பிற்கும் காதலுக்கும்என்னடீ உறவு?காதலைஆகாய மட்டத்திலிருந்துதான்அளக்கத் ...
சும்மா இருக்கும் போது காலாட்டிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்.நான் ஒரு பழைய அகராதியைப் புரட்டினேன்.அது ' அகம் ' என்றால் ' பாவம்' என்றது.காலாட்டம் நின்று விட்டது.என் அகம் பாவம் என்பது எனக்கே தெரியும்நான் என் அம்மாவின் அகம் ? என்றேன் அது ஆம் என்றதுகல்யாண் ஜியின் அகம்? அது ஆம் என்றது.கார்ல் ...
வீணாகி வழியும்தெருக்குழாய் நீரைபொறுப்பேற்று அடைப்பதற்காக...பள்ளி வாகனத்திலிருந்து கையசைக்கும்சின்னஞ் சிறு கரங்கள் ஏமாந்து போகாதிருப்பதற்காக...மலர்கள் சொல்லும்காலை வணக்கத்தைசெவி மடுத்துப் புன்னகைப்பதற்காக...நீண்ட க்யூவில் கட்டக் கடைசி ஆளாய் சாந்தமாக நிற்பதற்காக...துப்புரவு ...
வாயில் தேன் ரப்பரோடுகிலு கிலுப்பைக்குச் சிரித்தபடி மல்லாந்திருந்த பருவத்தில்எனக்குப் பெயர் சூட்டினார்கள்.அதை மூன்று முறைஎன் காதிலும் சொன்னார்கள்அப்போதுஎனக்கு எதுவும் தெரியாது.தமிழும் தெரியாது.தெரிந்திருந்தால்அந்தப் பெயரின் மீதுஅப்போதே மூத்திரம் பெய்திருப்பேன்.அவ்வளவு பெரியபாறாங்கல்லைத் ...
இந்தச் சொற்கள் யார் மீது பாடப்பட்டதோஅவள்அதற்குத் துளியும் அருகதையற்றவள்இந்தச் சொற்களை எவன் பாடினானோஅவன்இதற்குமுன் இப்படிபலபேரைப் பாடியவன்ஆயினும்இரு ஈனர்களுக்கிடையேவந்து அமர்கிறதுஒரு அமர காதல் கவிதைஅதைக் காதலின் தெய்வீகம் எழுதுகிறதுஅதுவேதான்வாசித்தும் கொள்கிறது.
நான் அவளைக் கண்ட பொழுதுஅவள் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள்.புதிதாக ஒன்றை அறிந்து கொள்வதன் மூலம்புதிதாக வந்து சேர்வதற்கென்றுஅவள் அழகில்துளி இடம் கூட இல்லை.ஆனால்போனால் போகிறதென்று அவள் வாசித்துக் கொண்டிருந்தாள்.என் சட்டைக்காலரைப் பிடித்து இழுத்ததுஅவள் தாழ்குழல்.பின்னங்கழுத்தின் பிசிறுகளை ...
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...