Published in எழுத்தாளர் ஜெயமோகன்
'மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று பதேர் பாஞ்சாலியைக் குறிப்பிடலாம். அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப்படுத்திவிடவும் முடியும். இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் ...
ஆர். ஷண்முக சுந்தரம் சத்யஜித் ராய் நாவல் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்
தமிழகத்தில் கோபுரக்கலை வரலாற்றை பெருங் கோவில்களான தில்லை, மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற கோவில்களின் கோபுரங்களை ஆராய்ந்து முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் விளக்குகிறார். கோபுரங்கள் பற்றி விளக்கும் இந்நூல் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. அவையாவன; கோபுரத்தின் தோற்றம், ...
மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தை களமாக வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு படையல். மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என தொடர்ந்து படையெடுப்பு நடத்திய காலம். நாயக்கர் ஆட்சி சிறப்பாக நடந்தாலும் தொடர்ந்த போரின் விளைவாக அதிகாரத்தை கைப்பற்ற போராட்டம், அதிக வரி என ...
களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும். ...
குளச்சல் மு.யூசுப் சுயசரிதை ஜி.ஆர். இந்துகோபன் தன்வரலாறு மணியன்பிள்ளை
சிறு குடும்பம் சந்திக்கும் சிக்கல்களில் பெரும்பாலும் ஊர் என்ன சொல்லும், பங்காளிகள் என்ன சொல்லுவார்கள் என்று செய்யும் செலவுகள்தான். பழக்க வழக்கம், பாரம்பரியம் என்கிற பெயரில் ஒவ்வொரு விழாவுக்கும் செய்யும் செலவுக்கு பெரிய தொகையை எடுத்து வைக்க வேண்டும். இன்று இலைமறை, காய்மறையாக இருக்கும் வரதட்சணை ...
சின்ன ஒரு கிராமமாக இருந்தாலும் அங்கே கண்டிப்பாக, நல்லது கெட்டதுகளுக்கு உதவ, அந்நிகழ்வுகளை நடத்தி வைக்க நாவிதரும், வண்ணாரும் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடிநாவிதராக இருப்பவர் இந்நாவலில் வரும் காரு மாமா. ஆறுமுகம் என்ற இயற்பெயர் ஆரானாகி, பின்னர் காரானாக மாறிவிட்டது. தன் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து ...
இந்நாவலை கேரளாவில் ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்த பொழுது எழுதியதாக பஷீர் முன்னுரையில் சொல்கிறார். அங்கே மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை தரப்படுகிறது. அங்கே இருந்த பைத்தியங்களிடம் பேசுகிறார். அதில் ஒரு பைத்தியத்துக்கு முழு யானையை திங்க வேண்டும் என ஆசை. இவர் "எங்க ...
செல்வத்துடன் இருந்த ஒரு குடும்பம், பின் அதை இழந்து ஒரு சிறிய வீட்டில் வசிக்க நேர்கிறது. அந்தக் குடும்பத்தின் தலைவியான குஞ்ஞுதாச்சும்மா பெரிய குடும்பத்தில் இருந்து இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டவர். அவரின் அப்பாவுக்கு ஒரு யானை இருந்தது. அதனால் குஞ்ஞுதாச்சும்மா யானைக்காரரின் மகள். எப்பொழுதும் 'நான் ...
பழைய பெருமைகள் உள்ள வடக்கு வீடு, முன்பு 64 பேருக்கு மேலிருந்த பெரிய குடும்பமாக இருந்தது. பின்னர் பங்கு பிரித்ததில் காரணவர் பெரிய மாமா மற்றும் அவரின் அக்கா குடும்பம் என இப்போது வடக்குப்பாடு இல்லத்தில் இருக்கிறார்கள். எட்டு கட்டு வீடாக இருந்து இப்போது நாலு கெட்டு வீடாக சுருங்கி விட்டது. சகோதரன் ...
பேய்ச்சி நாவல் பற்றி ஜெயமோகன் தளம் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் படித்த பொழுதே வாங்க நினைத்தேன். வாங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். நாவல் மீதான தடையை அறிந்த பின்னர் உடனடியாக இந்நாவலை வாங்க முடிவு செய்து பனுவல் தளத்தில் வாங்கினேன். புத்தகம் வந்து சேர்ந்து படித்தும் விட்டேன்.எழுத்தாளர் ம.நவீன் ...
சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள். கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம், இந்தக் கோவிலில் ...
க்ஷிதி மோகன் சென் சமஸ்கிருத வல்லுநர். தாகூரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். தாகூரின் அழைப்பை ஏற்று சாந்தி நிகேதனில் சேர்ந்து பணியாற்றி பங்களிப்புச் செய்தவர் சென். ஒரு ஆய்வாளராக அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இந்து மதம், அதன் ஞானத் தொடர்ச்சி பற்றி நூல்கள் இருந்தாலும், அவை ...
அமர்த்தியா சென் இந்து ஞானம் க்ஷிதி மோகன் சென் சுனில் கிருஷ்ணன் ஜெயமோகன்
'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி. அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார். கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் ...
இடமும் சொந்த வீடும் உள்ளவர்கள் இயன்ற அளவு கீரை, காய்கறிகள் போன்ற செடிகளை வளர்க்க வேண்டும். மாடி இருப்பவர்கள் மாடித்தோட்டம் போட முயற்சிக்கலாம். எல்லா வகையான காய்கறிகளையும் நாம் மாடியில் பயிரிட முடியும். கீரைகள் குறைந்த நாட்களில் விளைந்து பயன் தருபவை. முதன் முதலாக தோட்டம் போட முயல்பவர்கள் ...
எங்கள் பிள்ளை ஹரி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு. கீழே உள்ள புகைப்படம் எட்டு வருடங்கள் முன்பு குழந்தையாக இருந்தபோது எடுத்தது. அவன் கையில் இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'கால் முளைத்த கதைகள்'. அப்பொழுது அந்தப் புத்தகம் அவனுக்கு கதை சொல்வதற்காக நான் வாங்கியது. பலமுறை அதில் உள்ள கதைகளை ...
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...